6ஆம் வகுப்பு - தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன் - இணைய வழி மதிப்பீடு

6ஆம் வகுப்பு தமிழ் - தமிழ்த்தேன் மதிப்பீடு

6ஆம் வகுப்பு - தமிழ்

பருவம் 1 | இயல் 1 | தமிழ்த்தேன் - மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. ஏற்றத் தாழ்வற்ற --------- அமைய வேண்டும்
சரியான விடை: அ) சமூகம்
சரியான விடை: அ) சமூகம்
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு -------- ஆக இருக்கும்
சரியான விடை: ஈ) அசதி
சரியான விடை: ஈ) அசதி
3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
சரியான விடை: ஆ) நிலவென்று
சரியான விடை: ஆ) நிலவென்று
4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
சரியான விடை: ஆ) தமிழெங்கள்
சரியான விடை: ஆ) தமிழெங்கள்
5. 'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
சரியான விடை: ஆ) அமுது + என்று
சரியான விடை: ஆ) அமுது + என்று
6. 'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
சரியான விடை: அ) செம்மை + பயிர்
சரியான விடை: அ) செம்மை + பயிர்
7. தாய் மொழியில் படித்தால் ----- அடையலாம்
சரியான விடை: ஆ) மேன்மை
சரியான விடை: ஆ) மேன்மை
8. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ---------- சுருங்கிவிட்டது
சரியான விடை: இ) வானம்
சரியான விடை: இ) வானம்
9. 'செந்தமிழ்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
சரியான விடை: ஈ) செம்மை + தமிழ்
சரியான விடை: ஈ) செம்மை + தமிழ்
10. 'பொய்யகற்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
சரியான விடை: அ) பொய் + அகற்றும்
சரியான விடை: அ) பொய் + அகற்றும்
11. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
சரியான விடை: அ) பாட்டிருக்கும்
சரியான விடை: அ) பாட்டிருக்கும்
12. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
சரியான விடை: அ) எட்டுத்திசை
சரியான விடை: அ) எட்டுத்திசை
13. 'தொன்மை' என்னும் சொல்லின் பொருள்
சரியான விடை: ஆ) பழமை
சரியான விடை: ஆ) பழமை
14. 'இடப்புறம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
சரியான விடை: இ) இடம் + புறம்
சரியான விடை: இ) இடம் + புறம்
15. 'சீரிளமை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
சரியான விடை: ஆ) சீர்மை + இளமை
சரியான விடை: ஆ) சீர்மை + இளமை
16. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
சரியான விடை: ஆ) சிலப்பதிகாரம்
சரியான விடை: ஆ) சிலப்பதிகாரம்
17. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
சரியான விடை: ஆ) கணினித்தமிழ்
சரியான விடை: ஆ) கணினித்தமிழ்
18. 'தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடியவர்
சரியான விடை: ஆ) பாரதியார்
சரியான விடை: ஆ) பாரதியார்
19. 'மா' என்னும் சொல்லின் பொருள்
சரியான விடை: இ) விலங்கு
சரியான விடை: இ) விலங்கு
கோடிட்ட இடத்தை நிரப்புக - கொள் குறி வகை
20. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ________.
சரியான விடை: அ) மொழி
சரியான விடை: அ) மொழி
21. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ________.
சரியான விடை: இ) தொல்காப்பியம்
சரியான விடை: இ) தொல்காப்பியம்
22. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது அடிப்படையில் ________ வடிவமைக்கப்பட வேண்டும்.
சரியான விடை: ஆ) எண்களின்
சரியான விடை: ஆ) எண்களின்

📊 தேர்வு முடிவு

7ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - பருவம் 2 - வரலாறு - 1. விஜயநகர், பாமினி அரசுகள்

விஜயநகரம், பாமினி அரசுகள் - மதிப்பீடு

விஜயநகரம், பாமினி அரசுகள்

இணைய வழி மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?
2. விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
3. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?
4. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
5. பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக – சரியான விடையைத் தேர்வு செய்க
1. ஆரவீடு வம்சத்தின் தலைநகரம் ________.
2. விஜயநகரப் பேரரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு ________ என்று பெயர்.
3. மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் ________ வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.
4. விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை ________ கவனித்தார்.
III. பொருத்துக

ஒவ்வொரு வினாவிற்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

எண் கொடுக்கப்பட்டவை பொருத்தமான விடை
1 விஜயநகரா
2 பிரதாபருத்ரா
3 கிருஷ்ண தேவராயா
4 அப்துர் ரசாக்
5 தெனாலிராமகிருஷ்ணா
IV. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக
1. கூற்று: இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.
காரணம்: விஜயநகர இராணுவம் பீரங்கிப்படை மற்றும் குதிரைப்படையை கொண்டிருந்தது.
2. தவறான இணையைக் கண்டறியவும்.
3. பொருந்தாததைக் கண்டுபிடி.
V. சரியா? தவறா?
1. பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆவார்கள்.
2. இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த அரசராவார்.
3. அஸ்டதிக்கஜத்தில் அல்லசானி பெத்தண்ணா குறிப்பிடத்தகுந்தவராவார்.
4. விஜயநகரப் பேரரசில் அரசுரிமை என்பது பரம்பரையாகவும், பிறப்புரிமையின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.
5. பாமினி அரசில் 18 முடியரசுகள் இருந்தன.

6ஆம் வகுப்பு - சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 : அலகு 1 : வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

இணைய வழி மதிப்பீடு - வேதகாலம்

இணைய வழி மதிப்பீடு

வரலாறு – வேதகாலம் மற்றும் பெருங்கற்காலம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. ஆரியர்கள் முதலில் -------------------------- பகுதியில் குடியமர்ந்தனர்.
2. ஆரியர்கள் -----------------லிருந்து வந்தனர்.
3. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் "வாய்மையே வெல்லும்" -------------- லிருந்து எடுக்கப்பட்டது.
4. வேதகாலத்தில் எந்த விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?
II. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக
5. கூற்று: வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.

காரணம்: நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.
6. கூற்று 1: தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்.

கூற்று 2: இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.
7. வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது?
8. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?
III. கோடிட்ட இடங்களை நிரப்புக
9. வேதப்பண்பாடு ________ பண்பாடு இயல்பைக் கொண்டிருந்தது.
10. வேதகாலத்தில் மக்களிடமிருந்து ________ என்ற வரி வசூலிக்கப்பட்டது.
11. ________ முறையானது பண்டைய கால கல்விகற்கும் முறையாகும்.
12. ஆதிச்சநல்லூர் ________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
IV. சரியா? தவறா?
13. பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியத் தொல்பொருட்கள் இந்திய-ரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன.
14. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும்.
15. படைத்தளபதி 'கிராமணி' என அழைக்கப்பட்டார்.
16. கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும்.
17. பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
V. பொருத்துக

சரியான பொருத்தத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

18. கீழடி
19. பொருந்தல்
20. கொடுமணல்
21. ஆதிச்சநல்லூர்
🎉 மதிப்பீடு நிறைவடைந்தது!

8 ஆம் வகுப்பு - அறிவியல் - மின்னியல் - இணைய வழி மதிப்பீடு

மின்னியல் - மதிப்பீடு

⚡ மின்னியல் - மதிப்பீடு ⚡

வழிமுறை: அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு விடையை மட்டும் தேர்ந்தெடுக்கவும். தேர்வு முடிந்ததும் “மதிப்பெண் காண்க” பொத்தானை அழுத்தவும்.
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?
2. இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?
3. ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவையான மின் கூறுகள் எவை?
4. ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?
5. மின் உருகி என்பது ஒரு
II. கோடிட்ட இடத்தை நிரப்புக – கொள்குறி வகை
6. பொருட்களை ஒன்றுடனொன்று தேய்க்கும் போது ________ நடைபெறுகிறது.
7. ஒரு பொருள் எலக்ட்ரானை இழந்து ________ ஆகிறது.
8. மின்னல் தாக்குதலில் இருந்து கட்டடங்களைப் பாதுகாக்கும் சாதனம் ________.
9. அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாகப் பாயும்போது அவை பாதிக்கப்படாமல் இருக்க ________ அவற்றுடன் இணைக்கப்படுகின்றன.
10. மூன்று மின்விளக்குகள் ஒரே சுற்றில் மின்கலத்துடன் ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த மின்சுற்று ________ எனப்படும்.
III. சரியா அல்லது தவறா? – கொள்குறி வகை
11. எபோனைட் தண்டினை கம்பளித் துணி ஒன்றுடன் தேய்க்கும்போது எபோனைட் தண்டு எதிர் மின்னூட்டத்தைப் பெற்றுக்கொள்கிறது.
12. மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றை மின்னூட்டம் பெறாத பொருளின் அருகே கொண்டு செல்லும்போது, மின்னூட்டம் பெற்ற பொருளுக்கு எதிரான மின்னூட்டம் அதில் தூண்டப்படும்.
13. தூண்டல் முறையில் மின்னேற்றம் செய்யப் பயன்படும் ஒரு கருவி நிலைமின்காட்டி.
14. நீர் மின்சாரத்தைக் கடத்தும்.
15. பக்க இணைப்பில் அனைத்துக் கூறுகளிலும் மின்னோட்டம் மாறிலியாக இருக்கும்.
IV. பொருத்துக – கொள்குறி வகை
16. இரு ஓரின மின்துகள்கள் ________.
17. இரு வேறின மின்துகள்கள் ________.
18. கண்ணாடித் துண்டை பட்டுத்துணியில் தேய்க்கும்போது ________.
19. ரப்பர் தண்டை கம்பளியில் தேய்க்கும்போது ________.
20. மின் உருகி ________.
V. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளுக்கு காரணம் கூறுக – கொள்குறி வகை
21. ஒரு கண்ணாடித் தண்டினை பட்டுத் துணியில் தேய்க்கும்போது இரண்டும் மின்னூட்டமடைவதற்கான காரணம் என்ன?
22. உலர்ந்த தலைமுடியில் சீப்பைத் தேய்த்து சிறிய காகிதத் துண்டின் அருகில் கொண்டு சென்றால் அவை ஒட்டிக்கொள்வதற்கான காரணம் என்ன?
23. ஒரு மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் நிலைமின்காட்டியின் உலோகக் குமிழைத் தொடும்போது உலோக இலைகள் விலகுவதற்கான காரணம் என்ன?
24. ஒரு நிலைமின்காட்டியில் பயன்படுத்தப்படும் தண்டும் இலையும் உலோகத்தினால் ஆனவை. ஏன்?
25. இடி, மின்னலின் போது திறந்த வெளியில் குடையைப் பயன்படுத்தாமல் இருப்பது ஏன்?

என்ன செய்யப் போகிறோம்?


மாவட்ட ஆசிரியக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினரால்  நடத்தப்பட்ட கருத்தரங்கம் அது. கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள்(பத்துக்கும் குறைவானவர்கள் – அதிலும் குமுக ஆர்வலர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் அடக்கம்) என அரங்கம் நிறைந்திருந்தது. காலை பத்து மணியளவில் கருத்தரங்கம் தொடங்கியது. கல்வி அதிகாரிகள்(உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்), பணிநிறைவு கல்வி அதிகாரிகள் என அனைவரும் கருத்தரங்கத்தின் நோக்கத்தைக் குறிப்பிட்டு கருத்தரங்கு சிறப்படைய தங்கள் வாழ்த்துகளைக் கூறி விடைபெற்றார்கள். வழக்கமான இத்தகைய தொடக்க நிகழ்வுகளுக்காக ஒரு மணி நேரம் செலவிடப்பட்டது.

            தொடர்ந்து மாவட்ட ஆசிரியக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கருத்தரங்கத்தின் நிகழ்வுகள் பற்றிப் பேசத் தொடங்கினார். தொடக்க நிகழ்வுகளுக்கு அதிக நேரம் செலவிடப்பட்டதையும் கல்வி அதிகாரிகளின் உரைவீச்சைக் கட்டுப்படுத்த முடியாத தனது இயலாமையையும் வெளிப்படுத்தினார். கருத்தரங்கத்தின் நிகழ்வுகள் மற்றும் கருத்தாளர்களின் கருத்துகளையும் அன்று மாலையே சென்னைக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளதால் மதிய வேளைக்கு முன்பாக ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளைத் தொகுத்து வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

            வருகை தந்திருந்த ஆசிரியர்கள் தொடக்கநிலை, இடைநிலை எனப் பகுக்கப்பட்டனர். குறிப்பிட்ட பாடங்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தனித்தனியே குழுக்களாக அமர்த்தப்பட்டனர். தொடக்க நிலையில் ஐந்து பாடங்களுக்கென ஐந்து குழுக்களும், இடைநிலையில் ஐந்து பாடங்களுக்கென ஐந்து குழுக்களுமாக மொத்தம் பத்து குழுக்கள் உருவாக்கப்பட்டன.

            தேநீர் இடைவேளைக்குப் பின் 11.30 மணியளவில் இரண்டாம் அமர்வு தொடங்கியது. ஒவ்வொரு குழுவும் தத்தமக்கு வழங்கப்பட்ட பணியை செவ்வனே செய்யத் தொடங்கினர். வழங்கப்பட்ட படிவத்தில் உரிய முறையில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். மதிய இடைவேளைக்குப்பின் ஒவ்வொரு குழுவும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டனர். பொது மக்களுக்கும் தங்கள் கருத்துகளைக் கூற வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

            மதிய இடைவேளைக்குப் பின்னர் மூன்றாம் அமர்வு தொடங்கியது. முதன்மைக் கல்வி அலுவலர் வருகை புரிந்திருந்தார். கருத்தரங்கின் பொருள் வரைவினை தான் முழுமையாகப் படிக்கவில்லை என்றும் மேலோட்டமாகவே பார்க்க முடிந்ததாகவும் தெரிவித்தார். கருத்தரங்கில் பங்கேற்றுள்ள அனைவரும் அதனை முழுமையாக ஆய்வுசெய்திருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

            பொதுமக்கள் தங்கள் கருத்துகளைக் கூற அழைக்கப்பட்டனர். ஒன்றிரண்டு பேர் தங்களுக்குத் தெரிந்த ஏதேதோ கருத்துக்களைக் கூறினர். அவை எதுவும் பதிவுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை. தொடர்ந்து ஆசிரியர்களின் கருத்துகளை முதன்மைக் கல்வி அலுவலர் வினவினார். ஆசிரியர் ஒருவர் முன்வந்து தனது கருத்தினைக் கூறினார். உடனே குறுக்கிட்ட மா.ஆ.க.ப.நி. முதல்வர், ஆசிரியர்கள் தாங்கள் ஆய்வு செய்த பகுதியில் மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும். பொதுவான தங்களின் கருத்துகளைக் கூற அனுமதியில்லை என்று தடுத்துவிட்டார். சற்றேறக்குறைய 3 மணியளவில் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளைக் கூறி முடித்திருந்தனர். கருத்துப் படிவங்கள் முறையாகப் பெறப்பட்டு சென்னை செல்ல ஆயத்தமாக இருந்தவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

            தேநீர் இடைவேளைக்குப் பின்பு வந்திருந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வருகைச் சான்று, பயணப்படி, மதிப்புறு ஊதியம் வழங்கப்பட்டது. மாலை 4.30 மணியளவில் கருத்தரங்கம் இனிதே நிறைவெய்தியது.

            ‘சமச்சீர் கல்வி’யை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘பொது பாடத்திட்ட வரைவு’ குறித்த கருத்தரங்கு ஒன்றில் நடைபெற்ற நிகழ்வுகளே நாம் மேலே தந்துள்ளது.

            சமச்சீர் கல்வி தொடர்பாக முனைவர் முத்துக்குமரன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு அறிக்கை வெளியிடப்படாத நிலையில், வரும் கல்வியாண்டு முதல் ‘சமச்சீர் கல்வி’ நடைமுறைக்கு வருவதாக அரசு அறிவித்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பாகவும், முனைவர் முத்துக்குமரன் குழு அறிக்கை மீதும் பல்வேறு கேள்விகளும் ஐயங்களும் கல்வியாளர்களாலும் பொதுமக்களாலும் எழுப்பப்பட்டு(விரிவுக்கு கட்டுரையாளர் அக். 2009 தமிழினி இதழில் எழுதியுள்ள “என்னாகுமோ ஏழையின் கல்வி” என்ற கட்டுரையைப் பார்க்க) அதற்கான விடைகள் தெரியாத நிலையில், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த “பொது பாடத்திட்ட வரைவு” வெளியிடப்பட்டுள்ளது.

            பொது பாடத் திட்ட வரைவு வெளியான ஓரிரு நாள்களுக்குள்ளாக தமிழகத்தின்  அனைத்து மாவட்டங்களிலும், “பொது பாடத்திட்ட வரைவு - கருத்தரங்குகள்”  நடத்தப்பட்டன. கருத்தரங்கில் கலந்துகொண்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் எனப் பலரும் பாடத் திட்ட வரைவினை படித்திருக்கவில்லை. மேற்கூறிய கருத்தரங்கில் பங்கேற்ற கட்டுரையாளர் தவிர வேறு எந்த ஆசிரியரும் பொது பாடத்திட்ட வரைவினைப் பார்த்திருக்கவில்லை. (முன்னரே வழங்கப்பட்டு கருத்து, கூற பணிக்கப்பாட்டாலே பெருபான்மை ஆசிரியர்கள் அதற்கு முகாமை வழங்காத சூழலில், இணையத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள வரைவை வேலை வினைகெட்டு பதிவிறக்கம் செய்து படிப்பார்கள் போலும்!). கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவரும் கல்வி அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டவர்கள். தானா விரும்பி கலந்துகொண்டவர்களில் கட்டுரையாளர் மட்டுமே  ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரிரு தொண்டு நிறுவன ஊழியர்களும் “குமுக” ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

            பொது பாடத்திட்ட வரைவு நகல்கள் ஒன்றிரண்டினை கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் கொண்டுவந்திருந்தனர். அவற்றை ஒவ்வொரு குழுவுக்கும் பகுதி பகுதியாக பிரித்து வழங்கினர். இவ்வாறு ஒன்று முதல் பத்து வகுப்புகள் வரை ஒரு மாணவனுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப்பொருளை உள்ளடக்கிய ‘பொது பாடத்திட்ட வரைவு’ ஏறக்குறைய 2 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுவிட்டது.

            ஒவ்வொரு ஐந்து முதல் பத்து ஆண்டுகளிலும் பாடப் புத்தகங்கள் மாற்றப்படுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாடப்புத்தகங்கள் மாற்றப்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

            பாடப் புத்தகங்கள் மாற்றப்படும் போது, அன்றைய சூழலுக்கு ஏற்ப கலைத்திட்டம்(Carriculam) உருவாக்கப்படும். கலைத்திட்டம் என்பது பள்ளிகளில் உள்ள பாடச் செயல்கள், வகுப்பறைப் பட்டறிவுகள், வகுப்பறைக்கு வெளியே கற்கும் பாட இணைச் செயல்கள், அவற்றால் ஏற்படும் பட்டறிவுகள் ஆகிய அனைத்தும் அடங்கியது. தமிழகப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள கலைத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், குமுக அறிவியல், உடற்கல்வி போன்ற பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

            மாணவர்களின் பல்வேறு பயன் கருதியே பள்ளிக் கலைத்திட்டத்தில் பாடங்கள் உருவாக்கப்படுகின்றன. பாடங்களால் பெறப்படும் பயன்களை வாழ்க்கைப் பயன்கள், குமுகப் பயன்கள், அறநெறிப் பயன்கள், பண்பாட்டுப் பயன்கள், பொழுதுபோக்கு/ஓய்வுப் பயன்கள், தொழிற்பயன்கள் என பலவாறாக கூறலாம்.

            கலைத்திட்டம் இறுதி செய்யப்பட்ட பின்பு, ஒன்று முதல் பத்து வகுப்புகளுக்கு வழங்க வேண்டிய பாடப் பொருள்களை வரையறுத்து பாடத்திட்டம் உருவாக்கப்படும். பாடத்திட்ட வரைவு அரசிதழில் வெளியிடப்படும். அதன் நகல்கள் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். பொதுமக்கள் அரசு அச்சகத்தினின்று வாங்கிக் கொள்ளவும் வகை செய்யப்பட்டிருக்கும். அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க மூன்று மாத கால இடைவெளி தரப்படும். பெறப்பட்ட கருத்துகளை அதற்கென அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்து ஏற்கத்தக்கவை, ஏற்கப்படாதவை ஏற்கப்படாததற்கான காரணங்கள் போன்றவற்றைத் தொகுத்து அரசுக்குப் பரிந்துரைப்பர். அதன்படி பாடத்திட்டம் இறுதி செய்யப்படும்.

            இறுதி செய்யப்படும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடப்புத்தகங்கள் எழுதுவதற்கு குழுக்கள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் வகுப்பிற்கும் தனித்தனியே நூலாசிரியர்கள், மேலாய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் இப்பணியை  மேற்கொள்வர். இவ்வாறு புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும் நடைமுறை அமைந்திருக்கும்.

            அண்மையில் வெளியிடப்பட்டுள்ள பொது பாடத்திட்ட வரைவு உருவாக்குவதற்கு மேற்சொன்ன நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. கலைத்திட்டம் உருவாக்கப்படாமல் பாடத்திட்டம் மட்டும் உருவாக்கி வெளியிடுவது என்பது கதை உருவாகுவதற்கு முன்பே திரைக்கதை எழுதுவது போன்றது என்றால் மிகையில்லை. வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் “தேசிய கலைத்திட்ட வரைவு(National Corriculam Framework) – 2005” வழிகாட்டியாகக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை-1986 உருவாக்கப்பட்ட பின்பு இத்தகையதொரு நடவடிக்கையை அரசு பின்பற்றி வருவதாகத் தெரிகிறது. இதற்கு முந்தைய பாடத்திட்ட உருவாக்கத்திலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டிருக்கிறது.

            தேசிய கலைத்திட்ட வரைவு என்பது நாடு முழுமைக்குமான கல்வி ஏற்பாட்டினைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுவதாகும். அதனை நமது சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியது இன்றியமையாதது. இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில், தேசிய கலைத்திட வரைவு அப்படியே பின்பற்றப்பட்டுள்ளதா, நமது குமுகச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது யாரும் அறியாத கமுக்கமே.

            தேசிய கலைத்திட்ட வரைவை எந்தவொரு மாற்றமும் செய்யாமல் அப்படியே பின்பற்றுவதாகக் கொண்டாலும் அதனை பொது பாடத்திட்ட வரைவுடன் அனைவரது பார்வைக்கும் தந்திருக்க வேண்டும். அவ்வாறு தரப்படாத நிலையில் நமக்கு ஏற்படும் ஐயம் நியாயமானதே. பாடத்திட்டங்களில் காணப்படும் பாடப் பொருள் சார்ந்த ஒருங்கிணைப்பின்மை நமது ஐயத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

            மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முழுமையான கல்வி பற்றிய கலைத்திட்டம் இல்லாத நிலையில் பாடத்திட்ட வரைவு பற்றிய ஆய்வுகள், கருத்துக் கேட்பு நிகழ்வுகள், கருத்தரங்கங்கள் எல்லாம் வானத்தில் சிலம்பம் செய்வது போன்றதே.

            இவ்வளவு இடையூறுகளுக்கு நடுவில் பொது பாடத்திட்ட வரைவினை படிக்கின்ற நிலையில் பின்வரும் குறைகள் முதன்மை பெறுகின்றன.

  • பொதுப் பாடத்திட்ட வரைவு அரக்கப் பரக்க உருவாக்கப்பட்டுள்ளது.
  • வரைவு ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், குமுக அறிவியல் பாடங்களுக்கு மட்டுமே பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
  • உடற்கல்வி, கணினி அறிவியல், அறிவியல் தமிழ், சுற்றுச்சூழல் கல்வி, இசை, ஓவியம், விவசாயம், நெசவு, தையல் போன்ற பாடங்களுக்கு பாடத்திட்டம் வெளியிடப்படவில்லை.
  • தமிழ் மொழிக்கான முகாமை குறைக்கப்பட்டு மூன்றாவது மொழியாக கற்பிக்கத் தகுந்தகுந்த வகையிலே பாடப்பொருள்வைப்பு உள்ளது.
  • குமுக அறிவியல் பாடத்தில் தமிழக வரலாற்றின் முகாமை குறைக்கப்பட்டுள்ளது.
  • தொடக்க நிலைக்கான சூழ்நிலையியல் பாடத்திட்டத்தில் வழக்கமாக  இடம்பெறும் ‘மாவட்ட வரலாறு’ கழிக்கப்பட்டுள்ளது.
  • சிறுபான்மை மொழிகள் மற்றும் கீழ்த்திசை மொழிகளுக்கான பாடத்திட்டம்  வெளியிடப்படவில்லை.
  • பதின்ம(மெட்ரிக்)ப் பள்ளிகளில் பின்பற்றப்படும் பொருளியல் பற்றிய பாடப்பொருள் குமுக அறிவியல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
  • ஒவ்வொரு பாடத்திட்டத்துக்கும் இடையே ஒருங்கமைவு காணப்படவில்லை; பாடத்திட்டங்கள் வெவ்வேறு வகையான கட்டமைப்பைக் கொண்டுள்ளன.

எதிர்கால குமுகச் சவால்களை வளர்ந்துவரும் தலைமுறை எதிர்கொள்ளத் தேவைப்படும் ஆற்றல் பற்றியோ, குமுகம் சார்ந்த இன்றைய தேவைகளை உள்வாங்கிக் கொண்டு மாணவர்களிடம் அதனை வளர்த்தெடுக்க வேண்டிய  தேவை பற்றியோ எந்த சிந்தனையும் இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற மனநிலையில் பாடத்திட்ட வரைவு அமைந்துள்ளது. குமுக வளர்ச்சிக்கு அடித்தளம் அமைப்பதான கல்வியின் நோக்கத்தைத் தனிமனித மேன்பாட்டுக்கான கல்வி என்பதாக சுருக்கிக் கொள்வதாக பொதுப் பாடத்திட்ட வரைவு உள்ளது.

தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(NCERT) ஓராண்டுக்கு மேல் எடுத்துக்கொண்ட பணியைச்  சில நாட்களில் – பதினைந்து நாட்களில் பாடத்திட்டம் உருவாக்கல், இணையத்தில் வெளியிடல், ஏழு நாட்களில் மக்கள் கருத்தறிதல், ஓரிரு நாட்களில் பாடத்திட்டத்தை இறுதி செய்து பாடநூல்கள் எழுதத் தொடங்கிவிடல் என்று பெருமை அடித்துக் கொள்வதற்காக மாநிலக் கல்வித்துறை இதனைச் செய்வது போல் தெரியவில்லை. 1986இல் இராசீவு காந்தி கல்வித்துறையை அடித்தள மக்களிடமிருந்து பிடுங்கி அயல்நாடுகளுக்கும் உலகளாவுதலுக்கும் ஏற்ப மாற்றியமைத்துத் தொடங்கி வைத்த நிகழ்முறையின் படிமுறை வளர்ச்சிதான் இது என்பதில் ஐயமில்லை. இவ்வாறு மக்களைத் தொட்டு நிற்கும் மாநில அரசுகளிடமிருந்து அவற்றுக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த அதிகாரங்களும் பிடுங்கப்பட்டுவிட்டன. மக்களின் மொழிகள் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டுள்ளன. கல்விக்காகச் செலவிடப்படும் பல்லாயிரம் கோடிப் பணம் உள்நாட்டுக்குப் பயன்படப் போவதில்லை.

என்ன செய்யப் போகிறோம்?